Sri Guruji Store

Manufacturing For Sri Guruji Ashramam

P
Pragathiswar Apr 10, 2025

கோடை வெயிலால் பூமிக்கு ஆபத்து...கலியுக வெயில் பற்றி விஷ்ணு புராணம் சொல்லும் பகீர் தகவல்

கோடை வெயிலால் பூமிக்கு ஆபத்து...கலியுக வெயில் பற்றி விஷ்ணு புராணம் சொல்லும் பகீர் தகவல்

 

மனிதனின் வாழ்க்கை, மறுபிறப்பு பற்றிய பல குறிப்புகள் உள்ளது போல், கலியுகம் எப்படி இருக்கும் என்பது பற்றிய கணிப்புகளின் குறிப்புகளும் உள்ளன. இதில் கலியுகத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை என நாம் புலம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் வெப்பநிலை குறைவு தான் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. டில்லி உட்பட வட இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகமாக இருப்பதால், வரப்போகும் நாட்கள் எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்று மக்கள் பயப்படுகிறார்கள். ஏப்ரல் மாதத்திலேயே மே, ஜூன் மாதங்களில் இருக்கும் வெப்பம் போல இருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), குஜராத், மேற்கு ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. விஷ்ணு புராணத்தில் கலியுகத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி சில கணிப்புகள் உள்ளன. அதை பற்றி இப்போது பார்க்கலாம்.

 

விஷ்ணு புராணத்தின்படி, பூமி மற்றும் தேவலோகத்தில் நேரத்தை கணக்கிடும் முறை வேறு. பூமியில் 12 மாதங்கள் ஒரு வருடம். ஆனால் தேவலோகத்தில் ஒரு நாள் மற்றும் இரவு என்பது 12 மாதங்களுக்கு சமம். தேவர்களின் ஒரு வருடம் என்பது 360 பூமி வருடங்கள். 12,000 தேவ வருடங்கள் ஒரு சதுர்யுகம். பூமியில் ஒவ்வொரு மாதமும் காலநிலை மாறும். ஆனால் தேவலோகத்தில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான் மாறும். இந்த மாற்றங்கள் சில முக்கியமான நிகழ்வுகளின் அறிகுறியாகும். எனவே, அதிக வெப்பம் நேரடியாக கலியுகத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. விஷ்ணு புராணம் பூமியில் வரவிருக்கும் கடுமையான வெப்பம், வறட்சி மற்றும் பசுமை இல்லாத நிலை பற்றி கூறுகிறது.

 

கோடை வெயில் பற்றி விஷ்ணு புராணம் :

சதுர்யுகம் முடிவடையும் போது பூமி பலவீனமடையும். நூறு வருடங்களுக்கு வறட்சி ஏற்படும். உலகம் முழுவதும் இதன் தாக்கம் இருக்கும். பூமியின் வளம் குறையும். பயிர்கள் நாசமாகும். எங்கும் பசுமை இல்லாமல் பூமி தரிசாக மாறும். மக்கள் உயிருடன் இருந்தாலும், இறந்தவர்கள் போல இருப்பார்கள். வெப்பம் காரணமாக எங்கும் வறட்சி ஏற்படும். தண்ணீர் பற்றாக்குறையால் தோல் வறண்டு போகும். குளங்கள் வற்றும். குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிப்பார்கள். தண்ணீர் ஒரு விலைமதிப்பற்ற பொருளாக மாறும்.